ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தை தொடர்ந்து ஹிந்தியில் ஸ்ரீதேவி நடித்து வரும் படம் மாம். இப்படம் ஹிந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பாகி வெளியாக இருக்கிறது. மாம் படம் வருகிற ஜூலை 7-ம் தேதி ரிலீஸாக உள்ளது. அன்றைய தினம் தான் கெஸ்ட் இன் லண்டன் படமும் ரிலீஸாக உள்ளது. கார்த்திக் ஆர்யன், கிர்த்தி கர்பந்தா, பரேஷ் ராவல் நடிப்பில் உருவாகி வரும், கெஸ்ட் இன் லண்டன் படத்தை அஸ்வின் திர் இயக்க, அபிஷேக் பதக் மற்றும் மங்கத் பதக் தயாரிக்கின்றனர். முன்னதாக இப்படம் வருகிற ஜூன் 16ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் முடியாததால் ரிலீஸ் தேதியை ஜூலை 7-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.