சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பிரபு தேவா தற்போது 'யங் மங் சங்', 'குலேபகாவலி', கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படம் என பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்ற படத்தை இயக்குகிறார். பெரிய இடைவெளிக்கு பிறகு பிரபுதேவா இயக்கும் படம் இது.
பிரபுதேவாவின் 'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' தயாரிக்கும் இந்த படத்தில் கார்த்தி, விஷால் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். 'ஜெயம்' ரவியின் 'வனமகன்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள சாயிஷா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சாயிஷா தமிழில் நடிக்கும் இரண்டாவது படம் இது.
இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். இசை அமைக்கும் ஒவ்வொரு படத்தின் பாடல் கம்போசிங்குக்கும் வெளிநாடு செல்வதை ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கமாக வைத்திருக்கிறார். அதைப் போல 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படப் பாடல் கம்போசிங்குக்காக லண்டன் பயணமாகியுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ்! அவருடன் படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான பிரபுதேவாவும் லண்டன் சென்றுள்ளார்.
இளையராஜா தொடங்கி அத்தனை இசையமைப்பாளர்களும் சென்னையில் தான் பாடல் கம்போஸிங் செய்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் மட்டும் ஆரம்பத்திலிருந்தே வெளிநாட்டுக்கு சென்று தான் கம்போஸ் செய்கிறார். இதற்காக மட்டுமே தயாரிப்பாளர்கள் பல லட்சங்களை வாரி இறைக்கின்றனர்.