ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹிந்தி படம் 'பெஹன் ஹோகி தேரி'. இந்த படத்தின் சிறப்பு காட்சியை தன்னுடைய அப்பா கமல்ஹாசனுக்காகவும், தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிட்டார் ஸ்ருதிஹாசன்.
படம் முடிந்ததும் பேசிய ஸ்ருதிஹாசன், 'இந்த படத்தை என்னுடைய தந்தைக்காகவும், என்னுடைய பள்ளிக்காலத்திலிருந்து என்னுடன் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிடப்பட்டது மகிழ்ச்சி. படத்தை பார்த்துவிட்டு அப்பா நிறைய பேசினார். அவர் எனக்கு தந்தை மட்டுமல்ல, சிறந்த விமர்சகரும் கூட. அவருடைய அறிவுரை எனக்கு திரையுலகிலும், சொந்த வாழ்க்கையிலும் பெரும் உதவியாக இருக்கும் என்றார்.
கடந்த சில மாதங்களாக ஓய்வின்றி படங்களில் பிஸியாக இருந்து வந்த ஸ்ருதி, இப்போது சென்னையில் தன் அப்பாவுடன் தங்கி சிறிதுகாலம் ஓய்வெடுக்க உள்ளார். அதனைத்தொடர்ந்து லண்டனுக்கு சென்று தன்னுடைய இசைக்குழுவினர் தயாரித்து வரும் இசை ஆல்பத்தின் பணிகளில் ஈடுபட உள்ளார். இந்த இசை ஆல்பம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என தெரிகிறது.