ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள படம் ஸ்பைடர். ராகுல் பிரீத்சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் தமிழ் பதிப்பில் காமெடியனாக ஆர்.ஜே.பாலாஜியும், தெலுங்கு பதிப்பில் பிரியதர்ஷி புள்ளிகொண்டா என்ற காமெடி நடிகரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், தமிழ், தெலுங்கில் நேரடியாக உருவாகியுள்ள ஸ்பைடர் படத்தை இந்தி, மலையாளத்திலும் டப் செய்து நான்கு மொழிகளிலும் ஒரே நாளில் வெளியிடுகிறார்கள். மேலும், தற்போது ஸ்பைடர் படத்தின் தமிழ் வியாபாரம் ஆரம்பமாகியுள்ளது. தமிழ் தியேட்டர் ரைட்ஸ் விலை சுமார் ரூ.20 கோடி வரை பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.