ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முதன்முறையாக விஜய்சேதுபதி - த்ரிஷா இணைந்து நடிக்கும் 96 படத்தின் பூஜை முறைப்படி இன்று(ஜூன் 12-ம் தேதி) ஆரம்பமானது. ஒளிப்பதிவாளர் பிரேம் 96 படத்தை இயக்க, மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார்.
இப்படம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி.... "இது ஒரு அழகிய காதல் கதை. உணர்வுகளால் பின்னப்பட்ட ஒரு கதை. டைம் மிஷன் போன்று இந்தப்படம் ரசிகர்களை வேறு ஒரு இடத்திற்கு அழைத்து செல்லும் என்று நம்புகிறேன். ஏனென்றால் இயக்குநர் கதையை சொன்னபோது எனக்கு அந்த உணர்வு ஏற்பட்டது. நம் வாழ்க்கையில் இப்படியொரு காதல் நடக்கவில்லையே என்று ஏங்க வைக்கும். 96 காலக்கட்டத்தில் நடக்கு பள்ளிபருவ காதல் தான் கதையின் முக்கிய அடிநாதம்.
நான் சின்ன ஆர்ட்டிஸ்ட்டாக இருக்கும்போது த்ரிஷா ஒரு பெரிய ஸ்டார். அவரின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு நானும் தீவிர ரசிகன். த்ரிஷாவுடன் எல்லாம் நான் நடிப்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. இப்போது அது நடந்திருக்கிறது. த்ரிஷா, நயன்தாரா, தமன்னா போன்றவர்களின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தான் அவர்களை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது. எல்லா படத்திற்கும் ஒரே மாதிரி தான் உழைப்பை தருகிறேன். வித்தியாசமான புதிய முயற்சி எல்லாம் செய்வது கிடையாது. ரசிகர்களை எதை விரும்புகிறார்களோ அதை செய்கிறேன். நான் எப்போதும் எளிமையை தான் விரும்புவேன். எனக்கு இந்த மேக்கப் போன்றவற்றில் எல்லாம் ஆர்வம் கிடையாது. இமேஜ் என்ன பெரிய இமேஜ், நான் நானாகவே இருக்க விரும்புகிறேன் என்றார்.
தொடர்ந்து த்ரிஷா பேசுகையில், இது ஒரு அழகிய காதல் கதை. விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு அதுபோன்ற ஒரு காதல் கதையில் நடிக்கிறேன். கிட்டத்தட்ட ஓராண்டாகவே இந்த கதையில் நான் பயணித்து வருகிறேன். படம் பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் கண்ணீரை வரவழைக்கும் படமாக 96 இருக்கும். கடந்த நான்கு ஆண்டுகளில் நிறைய புதுமுகங்களுடன் பணியாற்றி வருகிறேன். விஜய் தொடங்கி விஜய்சேதுபதி வரை இந்த பயணம் எனக்கு பிடித்துள்ளது என்றார்.