ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
போலந்து நாட்டைச் சேர்ந்த சிறுவன் ஸ்பிக்ஸ், இரு தினங்களுக்கு முன்பு டுவிட்டரில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஒரு வித்தியாசமான வேண்டுகோளை வைத்தார். கமல்ஹாசன் நடித்து பல வருடங்களக்கு முன்பு வெளிவந்த தெலுங்குப் படமான 'சாகர சங்கமம்' படத்தில் இடம் பெற்ற 'தகிடததுமி தகிடததுமி தந்தானா' பாடலை தெலுங்கில் பாடி, அந்த வீடியோவை கமல்ஹாசனுக்கு டுவீட் மூலம் டேக் செய்திருந்தார்.
அதோடு, “மிஸ்டர் கமல்ஹாசன், இந்த டுவீட் உங்களை வந்தடைந்தால், உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்” என்று டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார். கமல்ஹாசனும் அந்த வீடியோவைப் பார்த்து அந்த போலந்து சிறுவனுக்குப் பதிலளித்தார்.
“பல குழந்தைகள் இந்தப் பாடலை தெலுங்கில் பாடுவார்கள். ஆனால், நீங்கள் ஸ்பெஷல். இந்தப் பாடலை ரசித்ததற்கு நன்றி. இந்தியா 15 அருமையான மொழிகளைக் கொண்டுள்ளது,” என அவருடைய பதில் டுவீட்டில் குறிப்பிட்டிருந்தார்.
கமல்ஹாசன் அளித்த பதிலால் மகிழ்ச்சி கொண்ட சிறுவன், கமலுக்கு நன்றி தெரிவித்ததோடு, கமல்ஹாசன் அளித்த பதிலையும் பெருமையாக டுவீட் செய்தார்.
கமல்ஹாசன் மூலமாக இந்த விஷயம் நேற்றுதான் தெரிய வந்தது. அதற்கடுத்த சில நிமிடங்களிலேயே டிவிட்டர் டிரென்டிங்கில் வந்துவிட்டார் சிறுவன் ஸ்பிக்ஸ்.