ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியதைத் தொடர்ந்து சங்கமித்ராவில் கதாநாயகியாக நடிக்கவிருப்பவர் யார் என்ற சஸ்பென்ஸ் தொடங்கிவிட்டது.
அனுஷ்கா, ஹன்சிகா ஆகியோரருடைய பெயர்கள் ஆரம்பத்தில் அடிபட்டன.
அனுஷ்கா நடித்தால் பாகுபலி படத்தின் சாயல் வந்துவிடும் என்பதால் அவரை பரிசீலனையில் இருந்து முதலிலேயே நீக்கிவிட்டனராம். அதன் பிறகு ஹன்சிகாவின் பெயர் பரிசீலனையில் இருப்பதாக கூறப்பட்டது. சுந்தர்.சி இயக்கத்தில் ஏற்கனவே நடித்தவர் என்ற வகையில் ஹன்சிகாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்ற சொல்லப்பட்டது.
இயக்குநர் சுந்தர்.சியும் ஹன்சிகாவையே சிபாரிசு செய்துள்ளார். ஆனால் வியாபார சாதுர்யம் மிக்க தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமியோ, ஹன்சிகாவை வேண்டாம் என நிராகரித்துவிட்டாராம். காரணம்... ஹன்சிகாவுக்கு தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் மார்க்கெட் இல்லை. அவரை கதாநாயகியாக்கினால் சங்கமித்ரா படத்தின் மொத்த பிசினஸ் பாதிக்கப்படும் என்ற விளக்கம் சொன்னாராம். அதன் பிறகே சுந்தர்.சி. அமைதியானாராம்.
இந்நிலையில், தற்போது கதாநாயகி வேட்டையில் நயன்தாராவின் பெயரும் இடம்பெற்றிருப்பதாக தகவல். நயன்தாரா நடித்த திருநாள், காஷ்மோரா, டோரா ஆகிய படங்களும் படு தோல்வியடைந்த நிலையில் நயன்தாராவையும் தயாரிப்பாளர் ஏற்க மாட்டார் என்று சுந்தர்.சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடைசியில் பாலிவுட்டிலிருந்து சங்கமித்ரா வரப்போகிறார்....