மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சண்டமாருதம் படத்தை அடுத்து அடங்காதே, ரெண்டாவது ஆட்டம், சென்னையில் ஒருநாள்-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சரத்குமார். முக்கியமாக ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொல்லாமல், மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் சரத்குமார், ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் அடங்காதே படத்தில் அரசியல்வாதியாக நடித்து வருகிறார். கதைப்படி ஜி.வி.பிரகாஷின் பாசமான அண்ணனாக நடிக்கிறார்.
இந்த படங்களைத் தொடர்ந்து தெலுங்கில் கொரட்டல்ல சிவா இயக்கத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கும் பாரத் அனி நேனு படத்தில் அவரது அப்பாவாக நடிக்கிறார் சரத்குமார். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் படத்தில் நடித்துள்ள மகேஷ்பாபு, அடுத்தபடியாக இந்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ப்ளாஷ்பேக் காட்சிகளில் மட்டுமே தோன்றும் சரத்குமார் கொஞ்சம் நேரம் வந்தாலும் மனதில் நிற்கும்படியான ஒரு அழுத்தமான ரோலில் நடிக்கிறார்.