ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகி வரும் படம் 'ஸ்பைடர்'. இப்படத்தின் டீசர் கடந்த வாரம் 1ம் தேதி காலை வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களில் 'விவேகம், கபாலி' டீசர் ஆகியவற்றின் சாதனையை முறியடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
எந்த வசனமும் இல்லாமல் ஒரு கிராபிக்ஸ் சிலந்தி மகேஷ் பாபுவின் தோள் மீது ஏறும் 84 வினாடிகள் கொண்ட டீசர் ரசிகர்களைக் கவர்ந்தது ஆச்சரியம்தான். மகேஷ் பாபு என்றாலே ஆக்ஷனில் அதிரடி காட்டுவார். அதனால், அவருடைய இந்த டீசர் அதிரடியாக இருக்கும் என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், வித்தியாசமாக அமைந்த இந்த டீசர் அவருடைய ரசிகர்களையும் திருப்திப்படுத்தியது.
தமிழ்ப் படங்களின் டீசர் சாதனையை முறியடித்தது மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முதன் முறையாக சில சாதனைகளை இந்த டீசர் நிகழ்த்தியது. வெளியான ஒரு வாரத்திற்குள்ளாக 1 கோடி பார்வைகளைக் கடந்து அடுத்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. டீசரை இதுவரை 1 கோடியே 8 லட்சம் பேர் யு டியுபில் பார்த்து ரசித்துள்ளனர். ஃபேஸ்புக்கில் 40 லட்சம் பேர் வரை பார்த்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பே யு டியூப், ஃபேஸ்புக் இரண்டையும் சேர்த்து 1 கோடி பார்வை கடந்தது. தற்போது யு டியூபில் மட்டும் 1 கோடி பார்வையைத் தாண்டியுள்ளது.
படத்தின் வியாபாரமும் இரு மொழிகளிலும் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.