ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த சந்தானத்தை சினிமாவுக்கு கொண்டு வந்தவர் சிம்பு. அதனால் சிம்பு மீது சந்தானத்திற்கு எப்போதுமே ஒரு மரியாதை உண்டு. அவர் படத்தில் நடிக்க கேட்டால் எந்த கேள்வியும் கேட்காமல் நடிக்க சென்று விடுவார். ஆனால் வருகிற ரம்ஜான் பண்டிகையில் இருவரும் மோதிக் கொள்ள இருக்கிறார்கள்.
சிம்பு தற்போது நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளிவருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ள இந்தப் படத்தில் தமன்னா, ஸ்ரேயா, சனாகான் நடித்துள்ளனர். அதே ரம்ஜான் பண்டிகைக்கு சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படமும் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வர் சுந்தரத்தில் சந்தானத்துடன் வைபவி, மயில்சாமி, கிட்டி, சாமிநாதன், ராதாரவி நடித்துள்ளனர். ஆனந்த் பால்கி இயக்கி உள்ளார். பட வெளியீடு குறித்து படத்தின் இயக்குனர் ஆனந்த் பால்கி கூறியதாவது:
படத்தை சென்சாருக்கு அனுப்பியிருக்கிறோம், ஜுன் மாத இறுதியில், ரம்ஜான் பண்டிகையை ஒட்டி எங்கள் படம் ரிலீஸ் ஆகும் என உறுதியாக நம்புகிறேன். பண்டிகை சூழல் எங்கள் படத்துக்கு பொருத்தமானது, கதையும் அதற்கேற்ற வகையில் இருக்கும், ரசிகர்களுக்கு நிச்சயம் தீனி போடும். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். என்கிறார் இயக்குனர் பால்கி.