ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கெளதம்மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் மஞ்சிமா மோகன். அதையடுத்து சத்ரியன், இப்படை வெல்லும் படங்களில் நடித்து வருகிறார். இதில் சத்ரியன் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும், தமிழில் அவர் நடித்த முதல் படம் ஓரளவு வெற்றி பெற்றபோதும், அடுத்தபடியாக கிளாமராக நடிப்பதில்லை என்ற கொள்கையில் அவர் உறுதியாக இருந்ததால் சில படங்கள் பின்வாங்கின.
அந்த வகையில், வாலு விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ஸ்கெட்ச் படத்தில் மஞ்சிமா மோகனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பாடல் காட்சிகளில் கிளாமராக நடிக்க வேண்டும் என்றதும் அவர் விலகிக்கொண்டார். அதையடுத்து தமன்னா கமிட்டானார். மேலும், தொடர்ந்து கிளாமர் அல்லாத வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்து வரும் மஞ்சிமா மோகன், ஹீரோயின் கிளாமராக நடிக்கவில்லை என்றால் ரசிகர்கள் தியேட்டர் பக்கம் வரமாட்டார்கள் என்று சொல்வதை ஏற்க மறுக்கிறார். கிளாமருக்காக எந்த ரசிகரும் தியேட்டருக்கு வருவதில்லை. நல்ல கதையம்சமுள்ள படங்களை பார்க்கவே அவர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள் என்கிறார்.