ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்த படத்தின் முதல் பாகத்தில் சிம்புவுடன் ஸ்ரேயா, தமன்னா நடித்துள்ளனர். வருகிற ரம்ஜான் பண்டிகைக்கு இந்த படம் வெளியாகிறது. மேலும், இந்த படத்திற்காக யுவன் ஷங்கர் ராஜா இசையில் இளையராஜா பாடிய ரோட்டுல வண்டி ஓடுது என்ற பாடலை பாடியிருக்கிறார். இந்த பாடல் நேற்று இளையராஜாவின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தில் சிம்பு நடித்து வரும் மைக்கேல் கேரக்டர் சம்பந்தப்பட்ட வசன காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது ஒரு பாடல் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பாடலில் மைக்கேல் கேரக்டரில் தோன்றும் சிம்பு 1980 காலகட்டத்து நடிகர்கள் போன்ற கெட்டப்பில் இருப்பதோடு, அந்த காலகட்டத்து நடிகர்கள் ஆடியதை போன்ற நடன அசைவுகளையும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.