ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஜித்-விஜய் நடிக்கும் படங்களின் பர்ஸ்ட் லுக், டீசர், ஆடியோ, படம்... என எது வெளியானாலும் அவர்களது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுகிறார்கள். அந்த வகையில், அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் டீசர் வெளியானபோது அதை உலக அளவில் அவரது ரசிகர்கள் டிரண்டிங் செய்தனர். அதோடு அஜித்தின் நெல்லை ரசிகர்கள் அந்த டீசரையே ஒரு தியேட்டரில் திரும்பத்திரும்ப போட்டு பார்த்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், வருகிற ஜூன் 22-ந்தேதி விஜய்யின் பிறந்த நாள். அன்றைய தினத்தில் தற்போது அவர் நடித்து வரும் 61வது படத்தின் டைட்டீல் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிறது. அதை வரவேற்று கொண்டாட விஜய் ரசிகர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர். அதோடு, விஜய் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையிலுள்ள அவரது ரசிகர்கள் ஒரு தியேட்டரில் விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களை திரையிட்டு கண்டுகளிக்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது.