அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

இந்தி பாடல்களை நோக்கி சென்ற தமிழர்களை, தன் இசையால் மீட்டெடுத்தவர் இளையராஜா. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில், ராமசாமி - சின்னத்தாயம்மாள் தம்பதிக்கு மகனாக 1943 ஜூன் 2ல் பிறந்தார். இயற்பெயர் ராசய்யா. தன் சகோதரர்களுடன் இசைக்குழு நடத்தினார். 1976ல், அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதுவரை, 1,000க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த, 1993ல், லண்டன் ராயல் பில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில், சிம்பொனிக்கு இசையமைத்து, ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருமை பெற்றார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது, மத்திய பிரதேச அரசின், லதா மங்கேஷ்கர் விருது, கேரள மாநில அரசின் விருதுகளை பெற்றவர். இசையில் சாதனை புரிந்ததற்காக, 1994ல், அண்ணாமலை பல்கலையிலும், 1996ல், மதுரை காமராஜர் பல்கலையிலும் முனைவர் பட்டம் பெற்றவர். சாகர சங்கமம் - தெலுங்கு, சிந்து பைரவி - தமிழ், ருத்ர வீணை - தெலுங்கு, பழஸிராஜா - மலையாளம், தாரை தப்பட்டை - தமிழ் ஆகிய திரைப்படங்களுக்கு இசை அமைத்ததற்காக, ஐந்து முறை தேசிய விருதுகளை பெற்று உள்ளார்.
மொழி கடந்து, மாநிலம் கடந்து உலக மக்களுக்கான பொது மொழியாக இருப்பது இசை மட்டுமே. இசையே ஒரு மொழிதான், அதன் மூலம் எத்தனையோ விதமான உணர்வுகளைப் புரிய வைக்க முடியும். மௌனமும் ஒரு வித மொழிதான், அந்த மௌனத்தைக் கூட தன்னுடைய இசையில் வார்த்தைகளால் புரிய வைக்க முடியாத உணர்வுகளைக் கூடப் புரிய வைத்தவர் இளையராஜா.
பல கஷ்ட, நஷ்டங்களையும் மறக்கச் செய்யும் மகிமை இளையராஜாவின் இசைக்கு உண்டு என்று தனிமையில் அவரது பாடல்களை ரசிப்பவர்களும், நீண்ட தூர சாலை, ரயில் பயணங்களில் அவருடைய பாடல்களை மட்டுமே கேட்டு ரசிக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!
வாசகர்களாகிய நீங்களும் இங்கே இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கலாம்.
இளையராஜாவின் டாப் பாடல்கள் இங்கே : http://cinema.dinamalar.com/ilayaraja/songlist.php