சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி மற்றும் பலர் நடிக்க 300 கோடி ரூபாய் செலவில் தயாராக உள்ள 'சங்கமித்ரா' படத்தின் நாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அத்துடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடந்த படத்தின் துவக்க விழாவிலும் கலந்து கொண்டார். இதனிடையே, சில நாட்களுக்கு முன் 'சங்கமித்ரா' படத்தில் ஸ்ருதிஹாசன் தொடர்ந்து பணி புரியப் போவதில்லை என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
இப்போது 'சங்கமித்ரா' கதாபாத்திரத்தில் நடிக்க வேறு ஒரு நாயகியைத் தேடி வருகிறார்கள். தமிழில் “யாவரும் நலம், தீராத விளையாட்டுப் பிள்ளை, யுத்தம் செய், ஆதி பகவன், சேட்டை, திலகர், வைகை எக்ஸ்பிரஸ்” உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை நீது சந்திரா 'சங்கமித்ரா' கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வத்துடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“ஒரு நாடக நடிகையாக, தற்காப்பு வீரராக, 'சங்கமித்ரா' கதாபாத்திரத்தில் நடிக்க அர்ப்பணிப்புடனும், மரியாதையுடனும், மகிழ்ச்சியுடனும் ஆர்வமாக உள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் முன்னணியில் இருக்கும் ஒரு நடிகையை 'சங்கமித்ரா' கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கும் ஆர்வத்துடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனம், வேறு ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பையாவது நீது சந்திராவுக்கு அளிக்கலாம். வெளிப்படையாக வாய்ப்பு கேட்பவரையும் கொஞ்சம் கருத்தில் கொள்ளலாமே...!