ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எண்பதுகளில் பிரபலங்களாக ஜோடி சேர்ந்து நடித்து திரையுலகையே கலக்கிய தென்னிந்திய நட்சத்திரங்கள் வருடம் தோறும் ஒருநாள் ஒன்றாக கூடி கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். 2009-ல் இவர்களின் முதல் சந்திப்புக்கான ஏற்பாடுகளை நடிகைகள் லிசியும், சுகாசினியும் செய்தார்கள். அப்போது முதல் வருடத்திற்கு ஒரு பிரபலம் பொறுப்பெடுத்து கொண்டு ஒவ்வொரு வருடமும் இந்த குதூகல சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.. இதில் தென்னிந்திய மொழிகளின் சூப்பர்ஸ்டார்கள் உட்பட பலரும் கலந்துகொள்வது வழக்கம்..
இதுவரை சென்னையில் நடைபெற்று வந்த இந்த நட்சத்திர சந்திப்பை ஒரு மாறுதலுக்காக இந்தமுறை சீனாவில் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். ஆனால் வரும் ஜூன் மாத முதல் வார இறுதியில் நடைபெற இருக்கும் இந்த நட்சத்திர சங்கமத்தை சீனாவில் நடத்தினால் வழக்கமாக தவறாது கலந்துகொள்ளும் 32 நட்சத்திரங்களில் எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் என்பது திட்டவட்டமாக தெரியவில்லை.. குறிப்பாக ரஜினி தற்போது 'காலா' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதால் இந்த நிகழ்வில் அவர் கலந்துகொள்வது சந்தேகம் தான் என்றே தெரிகிறது.