ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
1984ல் புதுமைப்பெண் என்ற படத்தில் அறிமுகமானவர் டாக்டர் ராஜசேகர். அதைத் தொடர்ந்து புதிய தீர்ப்பு, இதுதான்டா போலீஸ், மீசைக்காரன் என பல படங்களில் நடித்தவர், பின்னர் தெலுங்கிற்கு சென்று முன்னணி ஹீரோவானார். அதோடு நடிகை ஜீவிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா நட்சத்திர தம்பதிக்கு ஷிவானி, ஷிவத்மிகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
மேலும், இவர்களில் மூத்த மகள் ஷிவானி தற்போது கல்லூரி படிப்பை முடித்து விட்டார். அவரை சினிமாவில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளார் டாக்டர் ராஜசேகர். கல்லூரியில் படித்து வந்தபோதே ஷிவானிக்கு நடிப்பு பயிற்சியும் கொடுத்து வந்துள்ள நிலையில், அவரை அழுத்தமான ஹீரோயினாக அறிமுகம் செய்ய வேண்டும் என்று தற்போது சில டைரக்டர்களிடம் கதை கேட்டுள்ள டாக்டர் ராஜசேகர், மகள் ஷிவானி நடிக்கும் படத்தை விரைவில் அறிவிப்பார் என தெரிகிறது.