மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, ராம்குமார் என்ற வாலிபனின் கழுத்தை, போலீசார் அறுப்பது போன்ற காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வருவது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்தவர், சுவாதி, 24; மென்பொறியாளர். இவர், 2016 ஜூன், 24 காலை, 6:30 மணிக்கு, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மர்ம நபரால் கொடூரமாக கொல்லப்பட்டார். இது குறித்து விசாரித்த நுங்கம்பாக்கம் போலீசார், நெல்லை மாவட்டம், செங்கோட்டை, டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த, ராம்குமார், 24, என்பவனை கைது செய்தனர். அப்போது, அவன் கழுத்தை அறுத்து, தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். அவனது கழுத்தில், பிளேடால் அறுத்த காயங்களும் இருந்தன. சிகிச்சைக்கு பின், புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராம்குமார், மின் ஒயரை கடித்து, தற்கொலை செய்து கொண்டான். இதனால், இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், சுவாதி கொலை வழக்கு, சினிமா படமாகவும் எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது, இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளன. அதில், போலீசார், ராம்குமாரை அவனது வீட்டுக்கு பின்புறம், இரவு நேரத்தில் சுற்றி வளைக்கின்றனர்; அவனை முட்டி போட வைக்கின்றனர். பின், கைகளை பின்பக்கமாக பிடித்து கொள்ள, ஒரு போலீஸ்காரர், அவனது கழுத்தை அறுக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இது, போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சுவாதி கொலை வழக்கில், புலன் விசாரணை நடத்தி, தகுந்த சாட்சிகள் மற்றும் ஆதாரங்களுடன், ராம்குமார் கைது செய்யப்பட்டான். அப்போது, அவன் கழுத்தை அறுத்து, தற்கொலைக்கு முயன்றான். அதற்கான ஆதாரங்களும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.ஆனால், சுவாதி சினிமா படத்தின் டிரைலர் காட்சியில், போலீசார் கழுத்தை அறுப்பது போல், உண்மைக்கு மாறான காட்சிகள் உள்ளன. இது, பொதுமக்களிடம், போலீசார் மீது களங்கத்தை ஏற்படுத்தும். இது போன்ற காட்சிகளை நீக்குவது நல்லது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.