ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரயீஸ் படத்தை தொடர்ந்து ஷாரூக்கான், இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் ஷாரூக்கான் வித்தியாசமாக குள்ள மனிதராக நடிக்க இருக்கிறார். ஷாரூக்கான் உடன் அனுஷ்கா சர்மாவும் முக்கிய ரோலில் நடிக்கிறார். இதுநாள் வரை படத்திற்கு முந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது தலைப்பை முடிவு செய்துள்ளனர். அதன்படி படத்திற்கு "கத்ரீனா மேரி ஜான்" என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்தப்படத்தில் அனுஷ்கா முக்கியமான ரோலில் நடித்தாலும் இன்னொரு முக்கியமான ரோலில் கத்ரீனா நடிக்க இருப்பதாகவும், கதைப்படி, ஷாரூக்கிற்கு ஏற்ற ஜோடி கத்ரீனா என்பதால் இப்படியொரு தலைப்பு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ள கத்ரீனா மேரி ஜான் படம், அடுத்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸாக இருக்கிறது.