ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹிந்தி நடிகர் தர்மேந்திராவின் உறவினரான அபய் தியோல் 'இது வேதாளம் சொல்லும் கதை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். அஷ்வின், ஐஸ்வர்யா ராஜஷ் ஆகியோருடன் அபய் தியோலும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கான போட்டோ ஷுட் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது அபய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் டிவிட்டரில் வெளியிட்டு இது பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.
2005 முதல் ஹிந்திப் படங்களில் நடித்து வரும் அபய் தியோல், தனுஷ் ஹிந்தியில் அறிமுகமான 'ராஞ்சனா' படத்திலும் நடித்துள்ளார். ஹிந்தி நடிகர்கள் தமிழில் நடிக்க வருவது சமீப காலத்தில் அதிகரித்து வருகிறது.
'இமைக்கா நொடிகள்' படத்தில் இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்து வருகிறார். அஜித்தின் 'விவேகம்' படத்தில் விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார். இப்போது அபய் தியோல் 'இது வேதாளம் சொல்லும் கதை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வருகிறார்.