ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் நிலையில், முதல் பாகம் வருகிற ஜூன் 23-ந்தேதி ரம்ஜான் தினத்தன்று வெளியிடயிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்களாக காத்துக்கொண்டிருந்த நெஞ்சம் மறப்பதில்லை படமும் தற்போது ரம்ஜான் அன்று வெளியாகிறது. எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார்.
இந்த படங்களோடு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்துள்ள வனமகன் படமும் அதே நாளில் வெளியாகிறது. மே மாதமே இந்த படம் வெளியாகயிருந்தது. ஆனால் திரைப்படத்தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால், மே 30-ந்தேதி முதல் ஸ்டிரைக் அறிவித்திருந்ததால் அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க வனமகன் ரிலீஸ் தேதியை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்தார் ஏ.எல்.விஜய். ஆக, ரம்ஜான் அன்று சிம்பு, எஸ்.ஜே.சூர்யா படங்களுடன் ஜெயம்ரவி படமும் இணைந்து ஒரு மெகா போட்டியை சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கின்றன.