ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கடந்த பத்து வருடங்களுக்கு முன் தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் தான் 'மகதீரா'. ராம்சரணுக்கு மிக திருப்புமுனையாக அமைந்ததுடன் அவரை முன்னணி நடிகராகவும் மாற்றிய இந்தப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விரும்பி அதன் உரிமையை மது மன்டேனா என்கிற பாலிவுட் தயாரிப்பாளர் வாங்கியிருந்தார். இன்னும் அந்தப்படத்தை எடுக்கும் பணிகளில் அவர் இறங்காத நிலையில் சமீபத்தில் வெளியான 'ராப்தா' படத்தின் டிரைலர் அவரி மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ராப்தா படத்தின் டிரைலரில் இடம்பெற்றிருந்த பல காட்சிகள் அப்படியே மகதீராவை நினைவூட்டுவதாக மைந்துள்ளனவாம். இந்த டிரைலரை பார்த்துவிட்டு மது மன்டேனாவின் நண்பர்கள் பலரும் இதே கருத்த சொல்ல ஆடிப்போனார் மது மன்டேனா. ஆனால் 'ராப்தார்' படத்தின் கதாசிரியர்களோ, இது 'கர்மா' அதாவது பூர்வ ஜென்மம் பற்றிய படம் என்பதால் அவர்களுக்கு மகதீரா போல தோன்றுகிறது.. ஆனால் இரண்டு படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார்கள். இதனால் கொதித்துப்போன மது மன்டேனா, ஐதராபாத் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜூன்-1ஆம் தேதி இந்த வழக்கை விசாரிப்பதாக கூறியுள்ளார். இந்தப்படம் ஜூன்-9ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.