ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தியாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. இவர் நடித்த முதல் ஹாலிவுட் படமான 'பேவாட்ச்' படம் ஜுன் மாதம் 2 தேதியன்று தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியாகிறது.
பிரியங்கா சோப்ரா, விஜய் நடித்த 'தமிழன்' என்ற படத்தின் மூலம் தான் முதன்முதலாக திரையுலகில் அறிமுகமானவர். அவருடைய கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கும். இவர் தற்போது ஹாலிவுட்டிலும் அறிமுகமாகியிருக்கிறார்.
'பேவாட்ச்' என்பது ஹாலிவுட்டில் வெளியாகி வெற்றிப் பெற்ற பிரபலமான தொலைகாட்சி தொடர் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை தழுவி அதே பெயரில் ஹாலிவுட் படம் ஒன்று தயாராகியிருக்கிறது. இந்த படத்தில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர் வெய்ன் ஜான்சன், ஜாக் எஃப்ரான், அலெக்ஸான்டர் டட்டாரியோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சேத் கோர்டன் என்பவர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய வேடத்தில் அறிமுகமாகியிருக்கிறார்.
இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா, விக்டோரியா லீட்ஸ் என்ற போதைமருந்து கடத்தும் கும்பலைச் சேர்ந்த பெண்ணாக முக்கியமான கேரக்டரில் அற்புதமாக நடித்திருப்பதுடன், ஆக்ஷன் காட்சிகளிலும் துணிச்சலுடன் நடித்திருக்கிறார்.
இந்த படத்தை உலகமெங்கும் பாரமவுண்ட் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இந்தபடம் ஹாலிவுட்டில் இம்மாதம் 26 ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்தியா முழுவதும் ஜுன் 2 ஆம் தேதியன்று வெளியாகிறது.
இதனிடைய, இப்படத்தை வெளியிடும் நிறுவனமான Huebox Studios Pvt Ltd என்ற நிறுவனம் தான், லண்டனில் ஜுலை 8 ஆம் தேதியன்று ஏஆர்.ரஹ்மான் பங்குபெறும் மாபெரும் இசை நிகழ்ச்சியை முதன்முதலாக நடத்தவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.