மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பாகுபலி 2 படத்திற்கும் தங்கல் படத்திற்கும் தற்போது வசூல் ரீதியாக கடுமையான போட்டி நிலவி வருகிறது. உள்நாட்டில் அதிக வசூலைக் குவித்து முதலிடத்தில் இருந்து வரும் பாகுபலி 2, படம் இன்னும் சீனாவில் வெளியிடப்படவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு அங்கு வெளியான தங்கல் படம் அதிக வசூலைக் குவித்து 700 கோடி ரூபாயை நெருங்கி வருகிறது. சீனா வசூல் எதிர்பாராத அளவில் தங்கல் படத்திற்கு அதிகமாமனாதால் அந்தப் படம் தற்போது பாகுபலி 2 படத்தின் வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
பாகுபலி படத்தின் முதல் பாகம் சீனாவில் வெளியாகி சுமார் 7 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்தது. அது மிகப் பெரிய தொகையே அல்ல. அதே சமயம் பாகுபலி 2 படத்திற்கு உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், சீனாவில் வெளியிடும் போது நல்ல வசூலைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தங்கல் படத்திற்கு இப்போது கிடைத்து வரும் வரவேற்பு, அப்படியே பாகுபலி 2 படத்திற்கும் மாற வாய்ப்புள்ளது.
பாகுபலி 2 படத்தை சீனாவில் இந்த வருடக் கடைசியில் வெளியிட முதலில் திட்டமிட்டிருந்தார்கள். தங்கல் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பால் சில மாதங்கள் முன்னதாகவே வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பாகுபலி படத்தின் முதல் பாகத்திற்கு பெரிய அளவில் சீனாவில் விளம்பரப்படுத்தவில்லை. எனவே, இரண்டாம் பாகத்தை சீன ரசிகர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் அளவிற்கு திட்டங்களைத் தீட்டி வருகிறார்களாம்.