ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கமல்ஹாசன் இயக்கம், நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வரூபம் 2' படத்தின் பாடல் வரிகளை விரைவில் வெளியிட உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். கமல்ஹாசன் இயக்கி வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பு அவருடைய காலில் நடந்த அறுவை சிகிச்சை காரணமாக பல மாதங்களாகவே நடைபெறாமல் உள்ளது. எப்போது படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று தெரியவில்லை. இதனிடையே, சில வருடங்களுக்கு முன்பே எடுத்து முடிக்கப்பட்ட 'விஸ்வரூபம் 2' படத்தை வெளியிட கமல்ஹாசன் முடிவு செய்தார். 'சபாஷ் நாயுடு' படத்தின் தாமதத்தை சரி செய்யவே இந்த ஏற்பாடு.
'விஸ்வரூபம் 2' படத்தில் இருந்த வெளியீட்டுச் சிக்கல்கள் எல்லாம் முடிந்து படம் தற்போது இறுதிக் கட்டப் பணிகளில் உள்ளது. இந்தப் படம் 2017ம் வருடத்தில் வெளியாகும் என கமல்ஹாசன் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கான கடைசி பாடல் பதிவு சமீபத்தில் நடைபெற்றுள்ளது. ஹிந்தி பாடலை பிரசூன் ஜோஷி-யும், தமிழ்ப் பாடலை கமல்ஹாசனும் எழுதியுள்ளனர். விரைவில் தெலுங்குப் பாடல் பதிவு நடைபெற உள்ளது என கமல்ஹாசன் தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.