Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மணிரத்னத்தின் பூக்கடைக்கு ஹீரோயின் கிடைச்சாச்சு...!

17 டிச, 2011 - 10:31 IST
எழுத்தின் அளவு:

மணிரத்னம் இயக்கும் பூக்கடை படத்திற்கு ஒருவழியாக ஹீரோயின் கிடைச்சாச்சு, பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகளான லட்சுமி மஞ்சு தான் இப்படத்தின் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். ராவணன் படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தின் ஹீரோவாக, மாஜி ஹீரோ கார்த்திக்கின் மகன் கவுதம் நடிக்கிறார். படத்திற்கான கதை‌ எல்லாம் முடிவாகிவிட்ட நிலையில் ஹீரோயின் மட்டும் தேர்வு செய்யப்படாமல் இருந்தது. ஆரம்பத்தில் இப்படத்தின் ஹீரோயினாக கமல் மகள் ஆக்ஷ்ராஹாசன் நடிக்க வைக்க முயற்சி பண்ணினார் மணி, ஆனால் அக்ஷராவோ மறுத்துவிட்டார். இதனையடுத்து பார்த்திபன் மகள் கீர்த்தனா, ராதாவின் 2வது மகள் துளசி ஆகியோரிடமும் அணுகினார், ஆனால் அவர்களும் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் இப்போது தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள், லட்சுமி மஞ்சு ஹீரோயினாக நடிக்க ஓ.கே. சொல்லியுள்ளார். லட்சுமி மஞ்சு ஏற்கனவே சில ஆங்கிலப்படங்களிலும், சில டி.வி., சீரியல்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல தெலுங்கில் இரண்டு படங்களையும் தயாரித்து உள்ளார்.

தமிழில் முதல்படமே மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து லட்சுமி மஞ்சு கூறுகையில், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக இப்படத்‌தின் கதையை படித்தேன். ரொம்ப பிடித்து‌ போய்விட்டது. கடைசியாக டிசம்பர் 15ம் தேதி தான் நடிக்க சம்மதித்தேன். படத்திற்கு பூக்கடை என்று பெயரிட்டுள்ளனர். கார்த்திக்கின் மகன் கவுதமிற்கு ஜோடியாக நடிக்கிறேன். பூக்கடை படம் கிராமத்து கதை. இதில் பக்கா தமிழ் பெண்ணாக நான் நடிக்கிறேன். படத்தில் என்னுடைய ரோல் ரொம்பவே சவாலானது. படத்தின் சூட்டிங் ஜனவரியில் தொடங்குகிறது. அதற்காக காத்திருக்கிறேன்.

சினிமா துறையில் என்னை ரொம்பவும் இம்ப்ரஸ் செய்தவர்களில் டைரக்டர் மணிரத்னமும் ஒருவர். அவருடைய கீதாஞ்சாலி, மெளன ராகம் உள்ளிட்ட எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். அவர் படத்தில் நடிக்க நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். ஹாலிவுட் டைரக்டர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் அல்லது ‌மணிரத்னம் ஆகிய இருவரில் யார் படத்தில் நடிப்பீர்கள் என்று கேட்டால் உடனே, மணிரத்னம் படத்தில் தான் நடிப்பேன் என்று கூறுகிறார் லட்சுமி மஞ்சு.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

வா. ஸ்ரீனிவாசன் - Chennai,இந்தியா
18 டிச, 2011 - 07:35 Report Abuse
 வா. ஸ்ரீனிவாசன் மணிரத்னம் சார் அவர்கள் ரோஜா மற்றும் பாம்பே படங்களின் மூலம் தமிழ் பட உலகத்துக்கு பெருமை சேர்த்தவர் என்பது மகிழ்ச்சி அளித்தாலும் அவர் உருவாக்கிய டிரென்ட் தான் வன்முறை கலாச்சாரம் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. காவல் துறையின் விசாரணை காட்சிகளில் கூட வன்முறையை காட்டுவதை தொடங்கி வைத்த பெருமை இவருக்கே. எனவே ஊரே பாராட்டினாலும் நான் மணிரத்னம் சாரின் படங்களை பார்ப்பதில்லை. மேலும் சிறுவர்கள் அளவுக்கும் மீறி பேசுவது (காதல் போன்ற) போன்ற காட்சிகளையும் தொடங்கி வைத்த பெருமையும் இவருக்கே (அஞ்சலி) ஆனால் அஞ்சலி படத்தில் பல நல்ல விஷயங்களும் இருந்ததை மறுக்கவில்லை. அறிவு ஜீவி மணிரத்தினம் சார் அவர்களே மாறுங்கள் இல்லையேல் மறக்கப் படுவீர்கள். இதயக் கோயில், மௌன ராகம் போன்ற நல்ல படங்களை கொடுத்த நீங்கள் வன்முறை கதைகளை கைவிடுங்கள்.
Rate this:
madurikkaran - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17 டிச, 2011 - 17:24 Report Abuse
 madurikkaran அது என்ன மாஜி ஹீரோ கார்த்திக் என்றைக்கும் ஹீரோ தான்
Rate this:
shan - jeddah,இந்தியா
17 டிச, 2011 - 10:46 Report Abuse
 shan தினமலர் அது என்ன மாஜி ஹீரோ. கார்த்திக் என்றைக்கும் ஹீரோ தான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in