ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அடுத்த கட்டமாக டிவி சேனல் ஒன்றை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் வெளிவரும் அத்தனை படங்களின் பாடல்கள், டிவி ரைட்ஸ் அனைத்தையும் சினிமா டிவி சேனல் மட்டுமே ஒளிபரப்பும். பிரபலமான வேறு சேனல்களுக்கு, புதுப்படங்களின் எந்த உரிமையும் வழங்கப்படமாட்டாது.
சினிமா டிவி-யின் துணை சேனல்களாக 'சினிமா மியூசிக் டிவி திரைப்படப் பாடல்களை மட்டுமே 24 மணி நேரமும் ஒளிபரப்பும். அதேபோல 'சினிமா ஃபங்ஷன் டிவி என்ற சேனல் சினிமாவில் நடக்கும் விழாக்களை ஒளிபரப்பு செய்யும். சினிமா தொடர்புடைய நிகழ்ச்சிகளில் வேறு சேனல்கள் பங்குபெற அனுமதியில்லை.
புதுப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர், ஷூட்டிங் ஸ்பாட் என அனைத்து நிகழ்ச்சிகளுமே சினிமா டிவி சேனலில் மட்டுமே ஒளிபரப்பப்படும் என்பதில் தெளிவாகவும் தீவிரமாகவும் தீர்க்கமான முடிவெடுக்கத் தீர்மானித்துள்ளது. இனிமேல் தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாள்களில் 'சினிமா டிவி-யில் மட்டுமே நடிகர், நடிகைகளின் பேட்டிகள் அந்த Tvயில் இடம்பெறும்!