ப்ரியா வாரியருக்கு இது நல்ல நேரம்! : மஞ்சிமா மோகன் | எங்களுக்கும் பொறுப்பு இருக்கு! | கிராமத்திலும் சுற்றுலா கொண்டாடலாம்! | தீபிகா காதில் ரன்பீர் ரகசியம்? | திரைப்பட இயக்குனர்கள் முதல்வருடன் சந்திப்பு | சீனாவில் ஐமேக்ஸில் பாகுபலி 2 | எம்.எஸ்.ராஜேஸ்வரியை மறந்த தமிழ்த் திரையுலகம் | 'அர்ஜுன் ரெட்டி' ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் | மீண்டும் சமுத்திரகனி இயக்கத்தில் அமலாபால் - நானி | மோகன்லால் தவிர்க்கிறார் : தேசியவிருது இயக்குனர் வருத்தம் |
தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தற்போது பிசியான நடிகர் ஆகிவிட்டார். தாரை தப்பட்டையில் வில்லனாக அறிமுகமானவர் தற்போது தனிமுகம், பில்லா பாண்டி, வேட்டைநாய் படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். மன்னாரு படத்தை இயக்கிய ஜெய்சங்கர் இயக்கும் படம் வேட்டைநாய், சுபிக்ஷா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. இந்த நிலையில் ஆர்.கே.சுரேஷின் பிறந்த நாளான நேற்று இயக்குனர் பாலா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.
படம் பற்றி ஆர்.கே.சுரேஷ் கூறியதாவது: வேட்டை நாயின் கதையை கேட்டதுமே மற்ற படங்களின் தேதியை அட்ஜெட்ஸ் செய்து கொடுத்தேன். தற்போது 9 படங்களில் நடித்து வருகிறேன். அதில் பில்லா பாண்டி மட்டுமே எனது தயாரிப்பு, மற்றவை வேறு தயாரிப்பாளர்கள் தயாரிப்பது. ஒரு நடுத்தர நகரத்தில் நடக்கும் கதை. ஊரையை மிரட்டி உருட்டி வாழ்கிற ஒரு தாதாவுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். வேட்டை நாயாக இருந்தவன் திருமணத்துக்கு பிறகு வீட்டு நாயாக மாறுகிறார். மனைவியின் அன்புக்கு கட்டுப்படுகிறான். ஆனால் இந்த சமூகம் அவனை மீண்டும் வேட்டை நாயாக மாற்றுகிறது. முன்பை விட வெறிகொண்ட வேட்டை நாயாகிறான். புதிய பாதை, நந்தா மாதிரியான கதை. 50 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்புகள் அடுத்த வாரம் நடக்க இருக்கிறது. என்றார் ஆர்.கே.சுரேஷ்.