ப்ரியா வாரியருக்கு இது நல்ல நேரம்! : மஞ்சிமா மோகன் | எங்களுக்கும் பொறுப்பு இருக்கு! | கிராமத்திலும் சுற்றுலா கொண்டாடலாம்! | தீபிகா காதில் ரன்பீர் ரகசியம்? | திரைப்பட இயக்குனர்கள் முதல்வருடன் சந்திப்பு | சீனாவில் ஐமேக்ஸில் பாகுபலி 2 | எம்.எஸ்.ராஜேஸ்வரியை மறந்த தமிழ்த் திரையுலகம் | 'அர்ஜுன் ரெட்டி' ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் | மீண்டும் சமுத்திரகனி இயக்கத்தில் அமலாபால் - நானி | மோகன்லால் தவிர்க்கிறார் : தேசியவிருது இயக்குனர் வருத்தம் |
நடிகை வனிதாவும், அவரது இரண்டாவது கணவர் ஆனந்தராஜும் விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து வாழ்கிறார்கள். ஆனந்தராஜ் தன் மகளுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். வனிதா தன் குழந்தையை கடத்திச் சென்றுவிட்டதாக ஆனந்தராஜ் ஐதராபாத் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக வனிதாவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:
குழந்தையை கடத்தியதாக போலீசில் பொய்யான புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனந்தராஜை நான் விவாகரத்து செய்தபோது குழந்தையை, திங்கள் முதல் வியாழன் வரை அவர் பார்த்துக்கொள்வது எனவும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நான் பார்த்துக்கொள்வது என்றும் முடிவானது. ஆனால் 3 வருடத்துக்கு பின் திடீரென ஆனந்தராஜ், என்னிடம் தெரிவிக்காமல் குழந்தையை அழைத்துக் கொண்டு ஐதராபாத் சென்றுவிட்டார். வீட்டு முகவரி, செல்போன் எண் விவரங்களையும் தெரிவிக்கவில்லை. குழந்தையை பார்க்க முடியாமல் தவித்தேன். என் மகள் ஜெயனிதா என்னிடம் பேசினாள். எனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை. பயமாக இருக்கிறது என்னை எப்படியாவது காப்பாற்றி அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினாள்..
இதனால் உடனடியாக ஐதராபாத் சென்று அல்வால் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து விட்டு போலீசுடன் சென்று குழந்தையை என்னுடன் அழைத்து வந்து விட்டேன். எனது மகள் என்னுடன் விரும்பி வந்ததை கடத்தல் என்று எப்படி சொல்ல முடியும்.? என்னை கைது செய்தாலும் கவலை இல்லை. குழந்தையை ஆனந்தராஜிடம் ஒப்படைக்க மாட்டேன். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சட்டப்படி குழந்தையை மீட்பேன். என்கிறார் வனிதா.