Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போர் வரும் போது பார்த்துக் கொள்வோம் : அரசியல் பிரவேசத்திற்கு தயாராகிறார் ரஜினி

19 மே, 2017 - 09:22 IST
எழுத்தின் அளவு:

தமிழ்நாட்டில் இன்றைக்கு ஹாட்-டாப்பிக்காக இருப்பவர் ரஜினி தான். அரசியல் பற்றி அவர் பேசும் பேச்சுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

கடந்த 5 நாட்களாக ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வந்தார் நடிகர் ரஜினி. இன்று (மே 19), கடைசிநாளிலும் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். முன்னதாக ரசிகர்களிடம் ரஜினி பேசினார். அப்போது அவர் பேசிய பேச்சுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாது, தேசிய அளவிலான அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது இருக்கிறது. ரஜினி பேசிய விபரம் வருமாறு...


அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம்


நான் எது பேசினாலும் அது சர்ச்சை ஆகிறது. இல்லாவிட்டால் விவாதம் ஆகிறது. எதிர்ப்பு இல்லாமல் வளர முடியாது. அதிலும் அரசியலில் எதிர்ப்பு இல்லாமல் இருக்காது. அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம். ரசிகர்கள் மத்தியில் நான் பேசியது சமூகவலைதளங்களில் கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சனங்கள் வருவது வருத்தம் அளிக்கிறது.


நான் பச்சை தமிழன்


ரஜினி, தமிழரா என்ற கேள்வி எழுகிறது. நான் 24 வருடங்கள் தான் கர்நாடகாவில் இருந்தேன். கடந்த 44 வருடங்களாக உங்களுடன் தான் இருக்கிறேன். எனக்கு பெயர், புகழ், பணம் அள்ளிக் கொடுத்து, என்னை தமிழனாக்கியது ரசிகர்கள் தான். நான் இப்போது பச்சை தமிழன். என்னை நீங்கள் தூக்கி எறிந்தாலும் இமயமலையில் தான் போய் விழுவேனே தவிர, வேறு எந்த மாநிலத்திலும் போய் விழ மாட்டேன்.


நான் அரசியலுக்கு வரக்கூடாதா?


என்னை வாழ வைத்த தமிழ் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என நான் நினைக்க கூடாதா? அதற்காக நான் அரசியலுக்கு வர கூடாதா? அதற்காக வேறு யாரும் இல்லையா? என கேட்கிறார்கள், இருக்கிறார்கள். ஸ்டாலின் நல்ல திறமையானவர், அன்புமணி நல்ல கல்வியாளர், உலகம் முழுவதும் சுற்றி வந்தவர். திருமாவளவன் தலித்துகளுக்காக போராடக் கூடியவர். சீமான் நல்ல போராளி.


அரசியல் மாற்றம் வேண்டும்


ஆனால் தமிழகத்தில் அரசியல் சிஸ்டம் நன்றாக இல்லை. அதனை சரி செய்ய மக்கள் சிந்தனையில் மாற்றம் வர வேண்டும். தமிழகத்தில் அனைவரும் இணைந்து தான் அரசியல் மாற்றத்தை கொண்டு வர முடியும். தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தால் சர்ச்சையாகிறது என்பதற்காக தான் பேசுவதை தவிர்க்கிறேன்.


போர் வரும்போது பார்த்து கொள்ளலாம்


இந்த விமர்சனங்கள் அனைத்தும் செடி வளர போடப்படும் உரம், மண்ணாக தான் பார்க்கிறேன். நம்மை எதிர்த்து நாம் வளர சிலர் உதவிக்கொண்டிருக்கிறார்கள். எனக்கென தனிப்பட்ட கடமைகள், வேலைகள், தொழில் உள்ளது. உங்களுக்கும் குடும்பம், பொறுப்புக்கள் உள்ளது. அதனால் பொறுமையாக இருங்கள், போர் வரும் அப்போது பார்த்துக் கொள்ளலாம். அதுவரை பொறுமையாக இருங்கள்.


இவ்வாறு ரஜினி பேசினார்.


Advertisement
டாஸ்மாக்கிற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - ஜீவாடாஸ்மாக்கிற்கும், எனக்கும் எந்த ... குழந்தையை கடத்திச் சென்று விட்டார்: வனிதா மீது மாஜி கணவர் புகார் குழந்தையை கடத்திச் சென்று விட்டார்: ...


வாசகர் கருத்து (159)

Sridhar - Jakarta,இந்தோனேசியா
20 மே, 2017 - 20:46 Report Abuse
Sridhar GST அமலானபிறகு வசூல் கணக்கை கூட்டி காண்பிக்க முடியாது. எல்லோருக்கும் உண்மை நிலவரம் தெரிந்துவிடும். ஆகவே, மிக தீவிரமான ப்ரொமோ தேவைப்படுகிறது. இவருக்கு இருக்கும் கை கால்களை பார்த்தால் ராணுவத்தில் சிப்பாய் வேலைக்குக்கூட எடுக்கமாட்டார்கள். போரை எங்கே பார்ப்பது? இன்னொரு முறை நல்ல அரசியல் மற்றும் பொருளாதார அறிவுஇல்லாத ஒருவர் தமிழக தலைமையை ஏற்க அனுமதிக்க கூடாது. மெரினா எழுச்சி கண்ட தமிழர்களை ஆள தகுதி உள்ள தலைமை வேண்டும். சினிமாக்காரர்கள் எல்லோரும் அறிவில்லாதவர்கள் என கூறமுடியாது. அனால் தலைமை ஏற்க விழைபவர்கள் தங்கள் அறிவை நிரூபித்து காண்பிக்க வேண்டும்.
Rate this:
Rajendran Selvaraj - Saint Louis, MO,யூ.எஸ்.ஏ
20 மே, 2017 - 10:03 Report Abuse
Rajendran Selvaraj I am HUGE Rajini fan. But today's message from him is socked so much. He is an emotional freak, just like me. Look at his video today, he is asking for water after few words and few other people are running around. What ridicules, he didn't even prepared for simple speech. What are the thought process for him to the out TN people and how does he prepared for new ear with all IT and innovations are coming up. If he was really interested in people he could come to politics long back. Now, now we all know the BRUTAL fact we all know his health is not good. He spoiled it for whatever good reason. He has been treated in in foreign hospital for long time as all we aware of it. These things are clearly showing that, he is not like MGR. After all this, At this time all these drama, he should get into politics at whatever cost it is going to be. As a huge fan of him, I will myself or him, if he is not coming to politics at this time. Just above the statement it comes with huge responsibility, it is not easy task. If he understand the responsibility, he has to make Second and third level leadership now before make any next step. At least ADMK failed after 3rd generation after MGR. I will vote for பெரியார். Since he never enjoyed his luxury and he didn't even d his own party for shake of argument or truth. but he stand behind all his rough and tough social issues for his next generation thoughts ON HIS ERA.
Rate this:
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20 மே, 2017 - 09:57 Report Abuse
Venki ரஜினி இவ்வளவு உயர்ந்த மனிதர் என்று குதிக்கும் அரை வேக்காடுகள் ரஜினியின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகவோ அல்லது இந்தியாவின் ஜனாதிபதியாகவோ உடனடியாக நியமிக்க சட்டத்தில் ஏதேனும் வகை இருக்கின்றதா என்று கூட யோசிக்கலாம் கடந்த காலங்களிலும் தற்போதைய தமிழக அரசியலிலும் சில பன்னாடைகளால் அரசியல் சீர்கெட்டு போய்யுள்ளது என்பதால் யார் வேண்டுமானாலும் வந்து குத்தாட்டம் போடலாம் என்பது கேலிக்கூத்தானது மக்களின் ஒன்றுபட்ட புரட்சியின் பிறகுதான் நல்ல தலைமையை மீண்டும் தமிழகம் பெற முடியும் அதற்காக மக்கள் குறிப்பாக மாணவர்கள் மீண்டும் கடுமையாக போராடவேண்டும் இல்லையேல் இது போன்ற கூத்தாடிகள் எல்லாம் வேஷம் கட்டிக்கொண்டுதான் வருவார்கள்
Rate this:
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
20 மே, 2017 - 09:57 Report Abuse
Rangarajan Pg எத்தனையோ பேர் வந்து கட்சி ஆரம்பித்து வெறும் காகிதத்தில் மட்டும் அரசியல் செய்து விட்டு காணாமல் போய் இருக்கிறார்கள். அதே போல் இந்த ஆளும் காணாமல் போய் விடுவார். போக வேண்டும். அதுவுமில்லாமல் இந்த ஆள் தனது தற்போதைய திரைப்படம் நன்றாக ஓட வேண்டும் அதற்கு ரசிகர்களின் தயவு வேண்டும். அதற்காக அவர்களை சரி செய்து தனது கட்டுக்குள் கொண்டு வர அரசியல் பிரவேசம் என்ற ஆயுதத்தை எடுத்து ரசிகர்கள் என்ற பெயரில் உலா வந்து கொண்டிருக்கும் பணம் மற்றும் பதவி வெறி பிடித்த பேய்களுக்கு தீனி போட இந்த ஆயுதத்தை கையிலெடுத்திருக்கிறார். அவ்வளவு தான். இந்த ஆளையும் நம்பி வேலையற்று திரியும் ரசிக மகா ஜனங்கள் இருக்கிறார்கள். நாள்கணக்கில் காத்திருந்து புகைப்படம் எடுத்து கொள்கிறார்கள். என்னத்தை கூறுவது?
Rate this:
தமிழ் - ஈரோடு,இந்தியா
20 மே, 2017 - 09:55 Report Abuse
தமிழ் வேலை, வெட்டி இல்லாத ரசிகர்களே... இல்லை, இல்லை... வீரர்களே, தயாராகுங்கள் போருக்கு. தமிழகத்தைக் காக்க வந்த தானைத் தலைவன் பின் அணிவகுத்து நில்லுங்கள். போர்... போர்... போர்... வெற்றிவேல்... வீரவேல்.
Rate this:
மேலும் 154 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Thimiru pudichavan
  Tamil New Film Kaa
  • கா
  • நடிகை : ஆண்ட்ரியா
  • இயக்குனர் :நாஞ்சில்
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in