ப்ரியா வாரியருக்கு இது நல்ல நேரம்! : மஞ்சிமா மோகன் | எங்களுக்கும் பொறுப்பு இருக்கு! | கிராமத்திலும் சுற்றுலா கொண்டாடலாம்! | தீபிகா காதில் ரன்பீர் ரகசியம்? | திரைப்பட இயக்குனர்கள் முதல்வருடன் சந்திப்பு | சீனாவில் ஐமேக்ஸில் பாகுபலி 2 | எம்.எஸ்.ராஜேஸ்வரியை மறந்த தமிழ்த் திரையுலகம் | 'அர்ஜுன் ரெட்டி' ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் | மீண்டும் சமுத்திரகனி இயக்கத்தில் அமலாபால் - நானி | மோகன்லால் தவிர்க்கிறார் : தேசியவிருது இயக்குனர் வருத்தம் |
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 61 படத்தின் படப்பிடிப்பு தற்போது போலந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகிய மூவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை. அதற்குள் வியாபாரத்தை தொடங்கிவிட்டனர். இப்படத்தின் ஹிந்தி டப்பிங்குக்கான சாட்டிலை ரைட்ஸ் தற்போது விற்கப்பட்டிருக்கிறது. எவ்வளவுக்கு தெரியுமா? 11 கோடி.
தமிழ்ப்படத்தின் ஹிந்தி டப்பிங் ரைட்ஸுக்கே இந்த இந்த விலை இதுவரை கொடுத்ததில்லை. விஜய் நடிக்கும் படத்தின் ஹிந்தி டப்பிங் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் 11 கோடிக்கு விலைபோனது சாதனையாக பேசப்படுகிறது.