ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'துள்ளுவதோ இளமை' மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் தனுஷ், திரையுலகுக்கு வந்து 15 வருடங்களாகிவிட்டன. தனது திரையுலக பயணத்தில் 15 ஆவது வருடத்தை எட்டியுள்ள சந்தோஷத்தில் இருக்கிறார் தனுஷ். நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என இந்த 15 வருடங்களில் தன்னை வளர்த்துக் கொண்ட தனுஷ், சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த 'பா.பாண்டி' படம் மூலம் இயக்குநராகவும் வெற்றியடைந்துள்ளார்.
இன்னொரு பக்கம், கோலிவுட், பாலிவுட் படங்களில் நடித்த தனுஷ், 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் தற்போது கால் பதித்துள்ளார். கனடா நாட்டைச் சேர்ந்த கென் ஸ்காட் இயக்கத்தில் ரொமான்டிக் காமெடிப் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பை இந்தியா, பெல்ஜியம், பாரிஸ், ரோம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
ஆர்ட்டிஸ்ட் திரைப்படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகை பெரெனைஸ் பிஜோ முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் பகிர் எனும் கேரக்டரில் தனுஷ் நடிக்கிறாராம். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்துக்காக தன்னுடைய ஹேர்ஸ்டைலில் மாற்றம் செய்துள்ளார் தனுஷ். 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்ததும் வட சென்னை படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.