ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'அம்மா கிரியேஷன்ஸ்' டி.சிவா தயாரிப்பில் அதர்வா கதாநாயகனாக நடித்து வரும் படம் 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்'. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா கெசண்ட்ரா, பிரணிதா, அதிதி என நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். 'ஓடம்' இளவரசு என்ற அறிமுக இயக்குநர் இயக்கி வரும் இந்த படம் ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகி வருகிறது.
'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' படத்தை இம்மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தனர். பாகுபலி- 2 தியேட்டர்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதால் 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. எனவே ரிலீஸை அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளனர். ஒருவேளை அடுத்த மாதம் ஸ்டிரைக் அறிக்கப்பட்டால் மேலும் சில வாரங்கள் தள்ளி ரிலீஸ் செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் அதர்வா ஜெமினிகணேசனாக அதாவது ரொமான்ட்டிக் கேரக்டரில் நடிக்கிறார். சூரி சுருளி ராஜனாக அதாவது காமெடியனாகவும் நடிக்கிறார். முதன் முதலாக அதர்வாவும் சூரியும் இந்தப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் 'நான் கடவுள்' ராஜேந்திரன், தயாரிப்பாளர் டி.சிவா, மயில்சாமி, 'பிக் பிரிண்ட்' கார்த்திகேயன், சோனியா போஸ் வெங்கட், தீனா முதலானோரும் நடிக்கிறார்கள்.
இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் இப்படத்தின் ஒளிப்பதிவை எம்.ஸ்ரீசரவணன் கவனிக்க, டி.இமான் இசை அமைக்கிறார்.