ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் நாயகியாக நடித்தவர் ஸ்ருதி ஹரிஹரன். அதையடுத்து தற்போது ரா ரா ராஜசேகர், நிபுணன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதோடு, கன்னடம், மலையாள படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் ஸ்ருதி ஹரிஹரன்.
இந்நிலையில், ஸ்ருதி ஹரிஹரனின் பெயரில் யாரோ மர்ம நபர் போலி முகநூல் தொடங்கி, அதில் அவரது மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்களை வெளியிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ருதி ஹரிஹரன், பெங்களூர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், தன்னை ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட நபரை கண்டுபிடித்து தண்டனை கொடுக்குமாறு குறிப்பிட்டுள்ளார். . இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.