Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏஏஏ - 'புகை' படம், நியாயமா சிம்பு ?

15 மே, 2017 - 14:25 IST
எழுத்தின் அளவு:
Is-Simbu-did-correct.?

தமிழ் சினிமாக்களில் புகை பிடிக்கும் காட்சிகள், குடிக்கும் காட்சிகள் குறைக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது. ஆனாலும், யாரும் குறைத்த மாதிரி தெரியவில்லை. அதே சமயம், படங்களின் விளம்பரங்களில் புகை பிடிக்கும் காட்சிகள், குடிக்கும் காட்சிகள் இருக்கக் கூடாது என சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். குறிப்பாக சில முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து அப்படி இடம் பெற்று வந்தது அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்களும் இனி, அம்மாதிரி விளம்பரப்படுத்த மாட்டோம் என்று சொல்லி, படங்களிலும் அப்படிப்பட்ட காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்கள்.


ஆனால் சிம்பு நடிக்கும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் புதிய விளம்பர போஸ்டர் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. அதில் சிம்பு புகை பிடிப்பது போன்ற 'புகை'ப்படம்தான் இடம் பெற்றுள்ளது. அந்தப் படத்தில் 80களில் வரும் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கும் புகைப்படம்தான் அது.


கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனுஷ் நடித்து வெளிவந்த 'மாரி' திரைப்பட விளம்பரங்களில் இப்படி புகை பிடிக்கும் விளம்பரம் வந்த போது அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதற்கடுத்து யாருமே இப்படியான விளம்பரத்தை வெளியிட்டதில்லை. இந்த நிலையில் சிம்பு கொஞ்சமும் சமூகப் பொறுப்பில்லாமல் இப்படி ஒரு விளம்பரத்தை வெளியிட சம்மதித்திருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


தன்னைப் பற்றிய சர்ச்சை வர வேண்டும் என்பதற்காகவே சிம்பு இப்படியெல்லாம் செய்கிறார் என அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in