ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் டீசர் நேற்று நள்ளிரவு வெளியானது. வெளியான 24 மணி நேரத்தில் 70 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். ஹாலிவுட் பாணியில் வெளிவந்த டீசரை அஜீத் ரசிகர்கள் கொண்டாடினார்கள். டீசரில் வரும் காட்சிகளை வினயல் போர்டுகளாக தமிழ்நாடு முழுவதும் வைத்தனர்.
டீசர் வெளியான 9 மணி நேரத்துக்குள் டீசரில் இருந்த காட்சியை பிரமாண்டமான வினயல் போர்டாக தயாரித்து அதனை பொதுமக்கள் பார்வைக்கு நிறுவி ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்கள் கடலூர் ரசிகர்கள். இது தவிர மற்ற ஊர்களில் டீசர் காட்சிகளை போஸ்டராக அச்சடித்து ஒட்டினார்கள். பல ஊர்களில் இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் பைக் ஊர்வலம் நடத்தியிருக்கிறார்கள்.
அஜித் ரசிகர்களின் இந்த ஆர்வம் தயாரிப்பாளரையும், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது. பல ஊர்களில் அஜித் பேனர் வைப்பதற்கு ரசிகர்களுக்கு இடம் அளித்திருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள். ரசிகர்கள் இப்போதே பேனர்கள் வைக்க தயாராகி வருகிறார்கள். அஜித் தனது ரசிகர் மன்றங்களை கலைத்தாலும், ரசிகர்கள் அதனை முறைப்படி தற்போதும் நடத்தி வருகிறார்கள். அஜித் மனம் மாறும், மீண்டும் மன்றத்தை அங்கீகரிப்பார் என்ற அவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.