விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
இன்றைய தேதிக்கு திரைப்பட பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகள் அதிகமாகிவிட்டது. பாரதி ராஜா திரைப்பட கல்லூரி, தனஞ்செயனின் போஃப்தா திரைப்பட பயிற்சி நிறுவனம், பிரசாத் பயிற்சி நிறுவனம், பாலுமகேந்திரா பயிற்சி பட்டறை உள்பட 10க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள் சென்னையில் உள்ளது. இதற்கு லட்சக் கணக்கில் கட்டணம். குறைந்த செலவில் திரைப்படம் குறித்து படிக்க இருக்கும் ஒரே வாய்ப்பு தரமணி அரசு திரைப்படக் கல்லூரிதான். ரஜினி, நாசர், பி.சி.ஸ்ரீராம், ஆர்.கே.செல்வமணி, அரவிந்த்ராஜ் உள்ளிட்ட பலர் இங்கிருந்து வந்தவர்கள்தான். இந்த திரைப்பட கல்லூரியில் சேர்வதற்கான சேர்க்கை அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, டிஜிட்டல் இண்டர்மீடியட், இயக்கம், திரைக்கதை அமைப்பு, எடிட்டிங், அனிமேஷன், விஷ¨வல் எபெக்ட் ஆகிய பாடத்திட்டத்தின் கீழ் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த படிப்புகளின் 2017 மற்றும்18ம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கலைத்துறையில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் இதில் சேரலாம். இதற்கான விண்ணப்பங்களை தமிழக அரசின் இணைய தளத்தில் பதிவிரக்கம் செய்து கொள்ளலாம். இந்தியாவில் உள்ள 3 திரைப்படக் கல்லூரிகளில் அகில இந்தி தொழில்நுட்ப கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே கல்லூரி இது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சினிமா ஆர்வமிக்க இளைஞர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.