ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.ராமசாமி தயாரிக்கும் படம் சங்கமித்ரா. சுமார் 200 கோடி ரூபாய் செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். ஜெயம்ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் இதுவரை ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். தெலுங்கு ராணா, இந்தி அமிதாப்பச்சன், மலையாளம் மோகன்லால் ஆகியோருடன் பேச்சு நடந்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் அறிமுகம் மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்படுகிறது. 70வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் வருகிற 17ந் தேதி முதல் 28ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவின் ஸ்பான்சர்களில் ஒன்றாக தேனாண்டாள் பிலிம்சும் இணைந்துள்ளது. சங்கமித்ரா படத்துக்கான புரமோசனையும் அங்கு செய்ய இருக்கிறது. இதற்காக தயாரிப்பாளர் என்.ராமசாமி, இயக்குனர் சுந்தர்.சி, நடிகர்கள் ஜெயம்ரவி, ஆர்யா, நடிகை ஸ்ருதிஹாசன், கலை இயக்குனர் சாபுசிரில் ஆகியோர் பிரான்ஸ் செல்கிறார்கள்.