ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனுஷ் இயக்கிய ப.பாண்டியில் ராஜ்கிரணின் மகனாக நடித்த பிரசன்னா, தற்போது திருட்டுப்பயலே-2, துப்பறிவாளன், நிபுணன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், அஞ்சாதே படத்திற்கு பிறகு திருட்டுப்பயலே-2 படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக தனது பர்பாமென்ஸ் மட்டுமின்றி பாடிலாங்குவேஜையும் பக்காவாக மாற்றியுள்ளார் பிரசன்னா.
குறிப்பாக, திருட்டுப்பயலே-2 படத்தில் வில்லன் வேடத்திற்காக மாதக்கணக்கில் ஜிம் சென்று தனது பாடியை ஒர்க்அவுட் செய்துள்ளார். அது அவரை முழுமையான வில்லன் கெட்டப்புக்கு மாற்றியிருக்கிறது. அதேபோல் மிஷ்கினின் துப்பறிவாளன் படத்திலும் ஒரு அதிரடியான வேடத்தில்தான் நடிக்கிறார் பிரசன்னா. அந்த வகையில், இதுவரை எந்த படத்திலும் உடம்பை காண்பித்து நடிக்காத பிரசன்னா, இந்த படத்தில் பாலிவுட் வில்லன்களுக்கு இணையாக சட்டையை கிழித்துக்கொண்டெல்லாமல் சண்டை காட்சியில் களமிறங்கி மிரட்டுகிறாராம்.