ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் பிரபல குழந்தை நட்சத்திரம் எஸ்தர். 50க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பெரும்பாலும் ஹீரோயின்களின் குழந்தை பருவத்திலும், ஹீரோக்களின் தங்கையாகவும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் வெளிவந்த த்ரிஷ்யம் படத்தில் மோகன்லாலின் இளைய மகளாக நடித்தார். த்ரிஷ்யம் தமிழில் பாபாநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனபோதும், அதிலும் கமல்ஹாசனின் இளைய மகளாக நடித்தார். தெலுங்கு த்ரிஷயத்தில் வெங்கடேஷ் மகளாக நடித்தார்.
தற்போது 10ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு ரிசல்டுக்காக காத்திருக்கும் எஸ்தர், குழலி என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதனை அறிமுக இயக்குனர் சேர கலையரசன் என்பவர் இயக்குகிறார். இதில் எஸ்தர் தான் குழலியாக நடிக்கிறார். கிராமத்து பெண் வேடம். படத்திலும் 10ம் வகுப்பு மாணவியாகவே நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்குகிறது.