மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பாலிவுட்டில் தன் நடிப்பாலும், அழகாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களை சுண்டி இழுத்தவர் மாஜி ஹீரோயின் ஜீனத் அமன். தற்போது அவருக்கு 65 வயதாகிறது. பாலிவுட்டில் பிரபலங்களின் வாழ்க்கை சினிமாவாவது அதிகமாகி வருவதால் தனது வாழ்க்கை சினிமாவாக உருவானால் அதில் பிரியங்கா சோப்ரா தான் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜீனத்.
இதுப்பற்றி ஜீனத் அமன் கூறியிருப்பதாவது... "என்னுடைய வாழ்க்கை படத்தில் பிரியங்கா சோப்ரா தான் நடிக்க வேண்டும். அவர் மிகவும் அழகாக உள்ளார், எனது ரோலுக்கு மிக சரியாக இருப்பார். சிலர் என் வாழ்க்கையை படமாக்க கேட்டு வருகிறார்கள், ஆனால் அதற்கு நான் தயாராக இருக்கிறேனா என்று இப்போது தெரியவில்லை" என்றார்.