ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது! இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை அஜித் பிறந்த நாளான மே-1ஆம் தேதி வெளியிடவிருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகின. என்ன காரணத்தினாலே டீஸர் ரிலீஸ் செய்யப்படவில்லை.
மே 18ஆம் தேதி டீஸரை வெளியிடவிருப்பதாக இயக்குநர் சிவா அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனால் அஜித்தின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்நிலையில், அஜித் ரசிகர்களுக்கு மேலும் இன்ப அதிர்ச்சியாக, விவேகம் டீஸரை ஒரு வாரம் முன்பாக அதாவது மே 11ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக மீண்டும் அறிவித்தார் இயக்குநர் சிவா.
ஏன் இந்த மாற்றம்?
'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனத்திடம் கதை சொன்னபோது சொன்ன பட்ஜெட்டைவிட பல மடங்கு செலவு அதிகமாகிவிட்டதாம். அதனால் தயாரிப்பு தரப்பு, சிவா மீது சற்று அதிருப்தி என்று கூறப்படுகிறது. இருந்தாலும் டீசரை ஒருவாரம் முன்னதாக வெளியிட சொல்லி தயாரிப்பு தரப்பில் உறுதியதாக சொன்னதாக கூறப்படுகிறது. அதன் பிறகே விவேகம் டீசர் ஒரு வாரம் முன்னதாக வெளியிட முடிவு செய்யப்பட்டதாக தகவல்.