ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாகுபலி 2 படத்தின் பிரமாண்டத்தைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டுப் போயிருப்பார்கள். படத்தில் இடம் பெற்றுள்ள அரங்குகள், அரண்மனைகள், மாட மாளிகைகள் அனைத்துமே விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டவை. பாகுபலி 2 படத்தை எப்படி உருவாக்கினோம் என்பதைப் பற்றி ஒரு படம் வெளியிட்டால் கூட அந்தப் படம் பல கோடிகளை வசூலிக்கவும் வாய்ப்புண்டு. அந்த அளவிற்கு படத்தைப் பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள்.
படத்தில் அவற்றையெல்லாம் தவிர்த்து பலர் பார்த்து வியந்த அழகு அனுஷ்காவின் தோற்றம். 30 வயதைக் கடந்த அனுஷ்கா, படத்தில் பார்ப்பதற்கு 20 வயதுப் பெண் போல இளமையுடன் இருந்தார். சில காட்சிகளில் அந்தக் கால பாவாடை, தாவணி அணிந்து அவ்வளவு அழகாக இருந்தார். திருமணத்திற்கு பின் வரும் காட்சிகளில் மட்டும்தான் தற்போதைய 30 பிளஸ் தோற்றத்தில் தெரிந்தார்.
அனுஷ்காவின் 20 வயது தோற்றத்திற்காக சுமார் 2 கோடி வரை செலவு செய்து விஎப்எக்ஸ் கிராபிக்ஸ் மூலம் அவரை மாற்றியிருக்கிறார்கள். அந்தப் பொறுப்பை ஷாரூக்கானுக்குச் சொந்தமான ரெட் சில்லிஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறார்கள். ஷாரூக்கான் நடித்த ஃபேன் திரைப்படத்தில் அவர் இரு வேடங்களில் நடித்திருப்பார். அதில் ஒரு வேடம் 20 பிளஸ் தோற்றம். அந்தத் தோற்றத்தை விஎப்எக்ஸ் மூலம்தான் மாற்றினார்கள். அதனால்தான், பாகுபலி 2 படத்திற்காக அனுஷ்காவை இளமையாக மாற்றும் வேலையை அவர்களிடம் கொடுத்தார்களாம். எதிர்பார்த்தது போலவே அவர்களும் அனுஷ்காவை மாற்றி, ரசிகர்களை அசர வைத்துவிட்டார்கள்.
அனுஷ்கா, இஞ்சி இடுப்பழகி படத்திற்காக குண்டாக மாறியதை, அவரால் அதன் பின் அந்த குண்டு தோற்றத்தை குறைக்கவே முடியவில்லை. ஒரு யோகா ஆசிரியருக்கே இந்த நிலைமை வந்துவிட்டதே என டோலிவுட்டில் பேசினார்கள். இருந்தாலும் அனுஷ்காவை இளமையாகக் காட்டியதற்காக ஆன செலவு 2 கோடியை அனுஷ்கா சம்பளத்தில் பிடித்திருக்க மாட்டார்கள் என்று நம்புவோம். 1000 கோடி தாண்டும் வசூலில் அனுஷ்காவின் அழகும், நடிப்பும் சேர்ந்துதானே வசூலித்துக் கொடுத்திருக்கிறது.
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஃபேஸ் ஆப் பயன்படுத்தியவர்களுக்கு இந்த விஷயம் எளிதில் புரியும். ஒரு ஆண், பெண்ணாகவும், இளமையாகவும், முதியவராகவும் காட்டிக் கொண்டிருக்கிறது ஃபேஸ் ஆப்.
இனி, உங்கள் அபிமான நடிகர்கள் சிக்ஸ் பேக் காட்டினாலோ, மிகவும் இளமையாகத் தோன்றினாலோ, நம்பாதீர்கள். அனைத்திற்கும் சில பல கோடிகள் மட்டும்தான் செலவு.