ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஆர்.பாண்டியராஜன் இயக்கிய டபுள்ஸ் படத்தில் இசையமைப்பாளரானவர் ஸ்ரீகாந்த் தேவா. அந்த படத்தில் பிரபுதேவா-மீனா நடித்திருந்தனர். ஆரம்பத்தில் பல படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து வந்த ஸ்ரீகாந்த்தேவாவின் இசைப்பயணத்தில் தற்போது பரபரப்பு குறைந்துள்ளது. ஜித்தன் படத்திற்கு சூப்பர் ஹிட் பாடல் கொடுத்த அவர், அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்தார். ஆனால் அந்த படம் அவருக்கு கைகொடுக்கவில்லை.
இந்த நிலையில், தற்போது பிரியமுடன் பிரியா என்றொரு படத்திற்கு இசையமைத்துள்ளார் ஸ்ரீகாந்த்தேவா. கோழிக்கூவுது அசோக் நாயகனாக நடித்துள்ள இந்த படம் சைக்கோ திரில்லர் கதையில் உருவாகியிருக்கிறது. முக்கியாக, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரான இப்படம் அடுத்தமாதம் திரைக்கு வருகிறது. அதனால் தற்போது அப்படத்திற்கான பிரமோஷன் பாடலை ரெடி பண்ணிக்கெண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த்தேவா.
மேலும், இந்த படத்தின் பாடல்களை ஹிட் பண்ணி மறுபடியும் மார்க்கெட்டை பிடித்துவிட வேண்டும் என்று கூடுதலாக மெனக்கெட்டும் வரும் அவர், தமிழ் ஆடியோவை சென்னையிலும், தெலுங்கு ஆடியோவை ஐதராபாத்திலும் இரண்டு விழாக்கள் நடத்தி வெளியிடுகிறார்.