விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த நட்சத்திர நிகழ்ச்சி ஜூனியர் சூப்பர் ஸ்டார். 14 வயதுக்குட்டப்பட்ட குழந்தைகளின் நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சி. இதற்கு கிடைத்த வரவேற்பையட்டி இதன் சீசன் 2 நிகழ்ச்சியை ஒளிபரப்புவதில் ஆர்வம் காட்டியது ஜீ தமிழ்.
தமிழ்நாடு முழுவதும் முதல்கட்ட தேர்வு நடத்தி நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களை தேர்வு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இயக்குனர் கே.பாக்யராஜ், நடிகை ரோஜா, தொகுப்பாளினி அர்ச்சனா பணியாற்றுகிறார்கள். வருகிற 16ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சியின் புரமோசனுக்காக வித்தியாசமான நாடகம் ஒன்றை நடத்தி அதனையே புரமோசனாக வெளியிட்டிருக்கிறார்கள். கே.பாக்யராஜும், அர்ச்சனாவும் நாடத்தில் ஜோடியாக நடிக்கிறவர்கள். ஒரு ஊருக்கு நாடகம் போடச் செல்கிறார்கள். புதிதாக நடிக்க வந்திருக்கும் ரோஜாவுக்கு ர,ழ உச்சரிப்பு வராது. நாடகம் தொடங்கும் நேரத்தில் பார்த்தால் பார்க்க யாருமே வந்திருக்க மாட்டார்கள். ஒரே ஒரு சிறுவன் மட்டும் வந்திருப்பான். "இனிமே நீங்க எங்கேயும் நாடகம் போடக்கூடாதுன்னு சொல்லிட்டுப்போகத்தான் வந்தேன். எங்க நடிப்பை பார்க்கணும்னு அங்க வாங்க" என்று சொல்லிவிட்டுப் போகிறான். அவன் சொல்வது ஜூனியர் சூப்பர் ஸ்டார் ஷோவை. வித்தியாசமான இந்த புரமோ லைக்குகளை குவித்து வருகிறது.