ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கபாலி படத்துக்கு பின், கலையரசனும், தன்ஷிகாவும் இணைந்து நடித்துள்ள படம், உரு. இது, திகில் நிறைந்த கதையாம்; ஆனால், பேய் கதை இல்லையாம். கொடைக்கானலுக்கு செல்லும் ஒரு எழுத்தாளர் சந்திக்கும் பிரச்னைகள் தான், படத்தின் கதையாம்.
தன்ஷிகா, இப்போதெல்லாம், நல்ல கதையம்சம் உள்ள படம் என்றால், அது, சிறிய வேடமாக இருந்தாலும், சற்றும் தயக்கம் இல்லாமல் நடிக்க சம்மதித்து விடுகிறார். 'அதெல்லாம் சரி; உரு என்றால் என்ன அர்த்தம்' என, கேட்டால், 'உரு என்ற வார்த்தைக்கு, உருவம் என்ற ஒரு அர்த்தம் இருந்தாலும், பயம் என்ற அர்த்தமும் உள்ளது. இந்த படத்தை பொறுத்தவரை, பயம் என்ற
விஷயத்தை மையமாக வைத்து, படம் தயாராவதால், உரு என, பெயர் வைக்கப்பட்டு உள்ளது' என்கிறது, படக்குழு.