ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விஷாலுடன் ஆண்ட்ரியா, அனு இமானுவேல் கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் பிரசன்னா வில்லனாக நடிக்கிறார். மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமான அரோல் கரோலி துப்பறிவாளன் படத்துக்கு இசையமைக்கிறார். ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி 'துப்பறிவாளன்' படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.
இதுதவிர அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் மற்றொரு படம் 'இரும்புத்திரை'. இந்தப்படத்தையும் விஷாலின் 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனமே தயாரிக்கிறது. சமந்தா கதாநாயகியாகவும், அர்ஜுன் வில்லனாகவும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் பாடல்களை விஷால் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 - ஆம் தேதி வெளியிட உள்ளனர். செப்டம்பர் 28 ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். 'இரும்புத்திரை' படத்திற்கு யுவன் சங்கர் ராஜ இசை அமைத்திருக்கிறார்.
அறிமுக இயக்குனர் வெங்கடேசன் இயக்கும் 'நாளை நமதே' படத்திலும் நடித்து வருகிறார் விஷால். நாளை நமதே படத்தையும் 2017 ஆண்டிலேயே ரிலீஸ் செய்ய வேண்டும் என திட்டமிட்டிருக்கிறார் விஷால்! அவர் எண்ணம் ஈடேறினால், விஷால் நடிப்பில் இந்த ஆண்டு 3 படங்கள் ரிலீஸாகும் என்பதில் சந்தேகமில்லை.