ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பலே வெள்ளையத்தேவா படத்தை அடுத்து சசிகுமார் நாயகனாக நடிக்கும் படம் கொடிவீரன். இந்த படத்தை முத்தையா இயக்குகிறார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது வேறு சில நடிகைகளிடம் கால்சீட் பேசி வருகின்றனர்.
அதேபோல் இந்த படத்தில் வில்லனாக நடிகர் அர்ஜூனிடம் தான் முதலில் பேசினர். அவரும் ஒத்துக்கொண்டார். ஆனால், தற்போது அவர் ஹீரோவாகவும் நடித்து வருவதால், இந்த நேரத்தில் வில்லனாக நடித்தால் ஹீரோவாக நடிக்கும் படங்களின் வியாபாரம் பாதிக்கும் என அப்பட தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதால் கொடிவீரனில் வில்லனாக நடிக்க மறுத்தார் அர்ஜூன்.
அதனால், அவருக்கு பதிலாக யாரை நடிக்க வைக்கலாம் என்று பரிசீலனை நடத்தி வந்த கொடிவீரன் டீம், தற்போது ஈரம் அறிவழகன் இயக்கிய குற்றம் -23 படத்தை தயாரித்த இந்தர் குமாரை வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆக, ஒரு படத்தை தயாரித்த இந்தர் குமார் அடுத்த படத்திலேயே அதிரடி வில்லனாகிறார். இந்த கொடிவீரன் படத்தின் படப்பிடிப்பு மே 10-ந்தேதி முதல் மதுரையில் தொடங்குகிறது.