அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் |
சி 3 படத்திற்கு பிறகு ஹரி தனது சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். 14 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த சாமியில் விக்ரம், த்ரிஷா, கோட்டா சீனிவாசராவ், ரமேஷ் கண்ணா நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். ப்ரியன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
ஆரிச்சாமி என்கிற போலீஸ் அதிகாரி திருநெல்வேலியில் அட்டகாசம் செய்யும் தாதாக்களை அவர்கள் பாணியிலேயே மிரள வைக்கிற கதை. தாதாக்களிடம் பெரும் தொகை லஞ்சமாக பெற்று அதைக் கொண்டு நாலு பேருக்கு நல்லது செய்கிற கேரக்டர். போலீஸ் துறையின் ராபின் ஹூட்டாக சித்தரிக்கப்பட்டிருந்தது சாமியின் கேரக்டர்.
இப்போது இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. ஹரியின் கதை ஏரியாவிவில் இருந்து கசிந்த கதையின் படி. முதல் பாகத்தில் வில்லனை தீயிட்டு கொழுத்தும் ஆரிச்சாமி. அதன் பிறகு பல ஊர்களில் பணிபுரிந்து தாதாக்களை களையெடுக்கிறார். தன்னைப்போலவே தன் மகனும் போலீஸ் அதிகாரியாகி தாதாக்களை வேட்டையாட வேண்டும் என்று விரும்புகிறார். மகனும் போலீசாகிறார்.
இரண்டாம் பாக கதைப்படி ஆரிச்சாமி ஓய்வு பெற்று விடுகிறார். அவரது மகன் போலீஸ் அதிகாரியாகிறார். ஆரிச்சாமி காலத்தில் அரிவாள், கத்தி, நாட்டு வெடிகுண்டு, பெட்ரோல் பார்ம் உபயோகித்த தாதாக்கள், இப்போது ஏகே 47, நைட்ரஜன் குண்டு, சைலன்சர் துப்பாக்கி என நவீன ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள். ஆரிச்சாமி பாணியெல்லாம் இவர்களுக்கு சரிப்பட்டு வராது என்று ஆரிச்சாமி மகனும் நவீன ஆயுதங்களை கையில் எடுக்கிறார். ஆரிச்சாமியின் அனுபவமும், அவரது மகனின் நவீன போராடும் யுக்தியும் இணைந்து எப்படி படா படா தாதாக்களை அடக்குகிறது என்பதுதான் கதையாம்.
இதில் அப்பா விக்ரம் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். ஆரிச்சாமியின் பிளாஷ் பேக்கில் வருகிறார். இருவரின் திருமணம், குழந்தை பிறப்பு பகுதி அது. அதன் பிறகு த்ரிஷா இறந்து விடுவதாக காட்டி புதிய கதை ஆரம்பிக்கிறது. இளம் விக்ரமிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஹரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார். விக்ரம் நடித்த இருமுகன் படத்தை தயாரித்த சிபு தமீன்ஸ் தயாரிக்கிறார். படப்பிடிப்புகள் ஜூன் மாதம் துவங்குகிறது.