ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு விரைவில் குடும்ப வாழ்க்கையில் செட்டிலாக இருக்கிறார் சமந்தா. அதற்கு முன்னதாக, பொன்.ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். அனேகமாக, திட்டமிட்டபடி சமந்தாவின் திருமணம் நடந்தால், அவர் நடிக்கும் கடைசி தமிழ்ப்படம் இதுவாகத்தான் இருக்கும்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைப்போல் இந்தப்படத்தை முழுக்க முழுக்க கிராமப்பின்னணியில் படமாக்க இருக்கிறார் பொன்ராம். இந்தப் படத்தில் வீரமான பெண்ணாக நடிக்கும் சமந்தா அந்த கதாபாத்திரத்திற்காக சிலம்பம் கற்றுக் கொண்டுள்ளார். உடற்பயிற்சிக் கூடத்தில் சமந்தா சிலம்பம் சுற்றுவது போன்ற வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
சமந்தா வெளியிட்ட இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. ஆனால் எதற்காக சிலம்பம் கற்றுக்கொண்டார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பொன்.ராம் - சிவகார்த்திகேயன் இணையும் படத்துக்காகத்தான் சமந்தா சிலம்பம் கற்றுக் கொண்டுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
வேலைக்காரன் படப்பிடிப்பு முடிந்த சில வாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. படத்தில் நடிப்பதற்காக மட்டுமல்ல, சிலம்பம் கற்றுக்கொள்வதற்காகவும் சேர்த்து சமந்தாவுக்கு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.